Saturday 18 April 2009

சமூக ஜனநாயக முன்னணியின் செயல் வீரர்கள் கூட்டம்



இராமநாதபுரம் ஏப்ரல் 18, மனித நேய மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் சமூக ஜனநாயக முன்னணியின் செயல் விரர்கள் கூட்டம் இராமநாதபுரம் வலம்புரி மஹாலில் நடந்தது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் திரு. ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். சமூக ஜனநாயக முன்னணியின் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு. சலிமுல்லாஹ்கான் அவர்களை ஆதரித்து P.V.M அறக்கட்டளை உரிமையாளர் திரு. அப்துல் ரசாக், மாவட்ட பொருளாளர் திரு. வாணி சித்தீக், திரு. பாக்கர், திரு. தஸ்பீக் அலி, புதிய தமிழகத்தின் மாவட்ட செயலாளர் திரு. காளிதாஸ், இந்திய தேசிய லீக் நிர்வாகிகள், கோவை செய்யது உட்பட பலர் பேசினார்கள்.
அதன் பின்னர் மதியம் சுமார் 1.00 மணியளவில் இராமநாதபுரம் அரன்மனை முன்பாக வேட்பாளர் அறிமுக கூடடம் நடந்தது. கோவை செய்யது அவர்கள் ஏன் மனித நேய மக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அதன் பின்னர் வேட்பாளர் திரு. சலிமுல்லாஹ்கான் அவர்கள் உரையாற்றினார்கள் பின்னர் அங்கிருந்து ஆயிரக்கணக்கான தமுமுக தொண்டர்கள் பின்தொடர வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்றனர். வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு 100 மீட்டர் முன்பே வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும் போன்ற தேர்தல் கமிசனின் விதிமுறைக் அமலில் உள்ளதால் தொண்டர்கள் அனைவரும் தூரத்தில் நிற்க கோவை செய்யது தலைமையில் கூட்டணியை சேர்ந்த 5 நர்கள் மட்டும் வேட்பாளர் சலிமுல்லா கான் உடன் சென்றனர்

No comments: