Sunday 19 April 2009

உள்ளத்தில் உயிர் இல்லையென்றால்..

உறுப்புகளால் அழகானவர்கள்..., உடுப்புகளால் நிறைவானவர்கள்...இந்த மண்ணிலே மலர்தூவி கௌரவிக்கப்பட்டவர்கள்!..
ஆனால்...உள்ளத்தில் உயிர் இல்லையென்றால்.. சுவனத்தின் காற்றை சுவாசிக்க முடியாது..!
ஒரு நாவு பொய்யை பேசலாம்... ஆனால் அந்த அசுத்தம் உள்ளத்தில் இருந்துதான் வருகிறது..!விழிகளின் விபாச்சாரம்.. அந்த உள் கிணற்றில் இருந்துதான் ஊட்றெடுக்கிறது...! ஒரு தேசமே அழிந்திருக்கலாம்! ஒரு உள்ளம் தான் காரணமாக இருக்கலாம்! பாறைகளை விட.. இறுக்கமான கல்லாய் .. இன்று உள்ளங்கள் மாறிவருகின்றன..
எங்கள் இதயங்களை கசியவிடுவோம்..
ஒரு குழந்தையைப்போல் எம்மை தூய்மைப்படுத்திக்கொள்வோம்... இந்த இரண்டு சிறு உரைகளைக்கொண்டு ஒரு மெல்லிய இரவை நிறைவு செய்வோம்....

"ஷைத்தான் உள்ளத்தை ஊடுருவும் பாதைகளும்..
அதற்கான நிவாரணங்களும்..! "

Saturday 18 April 2009

அறிவு ஜீவிகளே சிந்தித்து செயல்படுங்கள் !

அஸ்ஸலாமு அலைகும்,

"ஏன்? ஏன்? இந்த கொலைவெறி? சகோதர முஸ்லிம் இயக்கத்தின் மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சியா?"
மமக பீஜே-வின் சகோதர இயக்கமல்ல, எதிரி இயக்கம்மமக-வை பீஜே வீழ்த்தாவிட்டால் மமக பீஜேவை வீழ்த்திவிடும்.
மமக-வின் ஜனனம், ததஜ-வின் மரணம்
"முஸ்லிம்களே இனியாவது விழிப்புடன் இருங்கள்! இயக்க சுயநலவாதிகளை இனங்கண்டு வேரறுப்போம்."
இது வெற்று கூச்சல், முஸ்லீம்கள் என்றுமே விழிப்படைய மாட்டார்கள்
உங்களால் பீஜே-வை வேரறுக்க முடியாது. பீஜே-வை அழிப்பேன் என்று கூரியவர்கள் தான் அழிந்து போனார்கள். எதிரியின் பலத்தையும் தன் பலமாக்கும் திறமையுள்ளவர் பீஜே. பீஜே-க்கு முன்னால் நம் அனைவரும் சுன்டைகாய். நசுக்கி எரிந்து விடுவார்

பீஜேவை வேரறுக்க ஒறுவன் பிறந்து தான் வரவேண்டும்.

முஸ்லீம் சமூகத்தின் முடிசூடா மன்னன் எங்கள் அண்ணன்

அவரவர்களின் பகுதிகளில் நிற்கும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு மட்டுமே ஓட்டளியுங்கள். முஸ்லிம்கள் நிற்காத தொகுதிகளில் தெளிவாக உங்களின் அடையாளத்துடன் "யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை" என்பதைப் பதிவு செய்யுங்கள்.

காலம் காலமாக சமுதாயத்திற்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கும் அநியாயங்களுக்கும் முடிவு கட்டும் வகையில், இனிமேல் முஸ்லிம் சமுதாயத்தின் ஓட்டுகளை வெறும் நோன்பு கஞ்சிக்கும் தொப்பிக்கும் பகரமாக பெறுவது இயலாத காரியம் என்பதை ஒன்றிணைந்து நின்று துரோகிகள் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் புரிய வைப்போம்.

சமுதாயத்தை ஒன்றிணைந்து நிற்க விடாமல், துரோகிகளுடன் இணைந்து நின்று கூறு போட முயலும் துரோகிகளை நம் பக்கமே வர விடாமல் பார்த்துக் கொள்வோம்.

மார்க்கத்தை ஆதாரத்துடன் போதிக்கும் வரை தான் எவனுக்கும் மதிப்பு. சுய கவுரவத்திற்காக சமுதாயத்தை அடகு வைத்து அரசியல்தனம் செய்ய ஆரம்பித்து விட்டால் எவனாக இருந்தாலும் அவனுக்குச் செருப்படி தான் என்பதைப் புரிய வைப்போம்.

சமூக ஜனநாயக முன்னணியின் செயல் வீரர்கள் கூட்டம்



இராமநாதபுரம் ஏப்ரல் 18, மனித நேய மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் சமூக ஜனநாயக முன்னணியின் செயல் விரர்கள் கூட்டம் இராமநாதபுரம் வலம்புரி மஹாலில் நடந்தது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் திரு. ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். சமூக ஜனநாயக முன்னணியின் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு. சலிமுல்லாஹ்கான் அவர்களை ஆதரித்து P.V.M அறக்கட்டளை உரிமையாளர் திரு. அப்துல் ரசாக், மாவட்ட பொருளாளர் திரு. வாணி சித்தீக், திரு. பாக்கர், திரு. தஸ்பீக் அலி, புதிய தமிழகத்தின் மாவட்ட செயலாளர் திரு. காளிதாஸ், இந்திய தேசிய லீக் நிர்வாகிகள், கோவை செய்யது உட்பட பலர் பேசினார்கள்.
அதன் பின்னர் மதியம் சுமார் 1.00 மணியளவில் இராமநாதபுரம் அரன்மனை முன்பாக வேட்பாளர் அறிமுக கூடடம் நடந்தது. கோவை செய்யது அவர்கள் ஏன் மனித நேய மக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அதன் பின்னர் வேட்பாளர் திரு. சலிமுல்லாஹ்கான் அவர்கள் உரையாற்றினார்கள் பின்னர் அங்கிருந்து ஆயிரக்கணக்கான தமுமுக தொண்டர்கள் பின்தொடர வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்றனர். வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு 100 மீட்டர் முன்பே வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும் போன்ற தேர்தல் கமிசனின் விதிமுறைக் அமலில் உள்ளதால் தொண்டர்கள் அனைவரும் தூரத்தில் நிற்க கோவை செய்யது தலைமையில் கூட்டணியை சேர்ந்த 5 நர்கள் மட்டும் வேட்பாளர் சலிமுல்லா கான் உடன் சென்றனர்

தொழுதிடுவோம் வருங்களேன்!

நிலையில்லாத உலகமதில்
நிரந்த்தரமின்ரி வாழும் நாம்
நித்திய ஜீவன் அல்லாஹ்வை
நித்தம் தொழுதிட வேண்டாமா?
நிம்மதியில்லா உள்ளத்தில்
நிலைதடுமாறும் எண்ணமதை
நேர்மையாளன் அவனிடத்தில்
கூறி முறையிட வேண்டாமா?
அற்பமான இவ்வுலகில் -மிக
சொற்பகாலம் வாழும் நாம் -வெகு
நுட்பமாக நற்செயல் புரிந்து -இறை
நட்பை பெற்றிட வேண்டாமா?
பாவமறியா புருசர்களா -நாம்
தவறே செய்யா மானிடரா
நிறைமனதோடு முறையிடவே -அவனை
நித்தம் தொழுதிடுவோம் வாருங்களேன் .
இறைஇல்லம் பாங்கோசை இரவு பகல் கேட்கிறதே !!
காதில் விழவில்லையா ?
முறையாக சென்றங்கு நிறைவாக தொழுதுவர
நல்லெண்ணம் ஏதும் வரவில்லையா .

Wednesday 15 April 2009

சிந்தனைக்கு சில வரிகள் :

பள்ளிகள் அதிகமாக இருக்கின்றன ஆனால் சினிமா தியேட்டர்கள் ,விபச்சார விடுதிகள் ,மது அருந்தும் இடங்கள் அதைவிட அதிகமாக இருக்கின்றன .

திருக்குர்ஆண்,ஹதீஸ் ,மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் ஏராளம் ஆனால்கெட்ட பழக்கங்களையும் கொள்கைகளையும் பரப்பும் புத்தகங்கள் இதைவிட பண் மடங்கு தாராளம்.

அறிவை புகட்டும் எத்தனையோ கல்விகூடங்கள் ,அதே நேரத்தில் கலாச்சாரத்தை அளிக்க எத்தனையோ கலைகூடங்கள் .

இஸ்லாமியக் கருத்துகளையும் அல்லாஹுவின் அற்புதங்களையும் பர்க்ககுடிய எத்தனையோ சேனல்கள் ஆனால் மானத்தை அளித்துவிடக்கூடிய அலைவரிசைகள் மறுபுறம் .
இன்னும் சிலர் விபச்சாரம் புரிகின்றார்கள் பலர் மோசடி செய்கின்றார்கள் இப்படி இன்னும் எத்தனையோ வகையான முறையில் மற்றவர்கள் பணத்தை மோசடி செய்கின்றார்கள் ,இவைகளையெல்லாம் முஸ்லீம் என்று சொல்லக்கூடிய நமது சகோதரர்கள்தான் சர்வ சாதாரணமாக நாள்தோறும் செய்கின்றார்கள் .
வல்ல அல்லாஹ் தவறான மனிதர்களுக்கு நேரான பாதை காட்டுவானாக ஆமீன் .

மனிதன் என்று சொல்லடா,தலைநிமிர்ந்து நில்லடா!

மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டியவையாகும் . யாருடையே உயிராக
இருந்தாலும் அந்த உயிருக்கு கண்ணியமும் சிறப்பும் இருக்கிறது . ஒரு
உயிருக்கும் இன்னொரு உயிருக்குமிடையில் எந்தவித பாகுபாடும் கிடையாது .
எல்லா மனிதர்களுக்கும் இறைவன் ஒரேமதரியான உடல் வடிவமைப்பை தான் அமைத்துள்ளான்.
இந்த அடிப்படையில் மனிதர்களுக்கிடையில் எந்தவித ஏற்டதாள்வும் கிடையாது .
ஒரே மண்ணில் பிறந்தோம் என்பதற்காக மன்வாதம் பேசுவதும் ,நிறவாதம் , மொழிவாதம் பேசுவதும் மனிதநேயத்தை குழிதோண்டி புதைக்ககூடியவையாகும்.

Monday 13 April 2009

ஓர் பெண்ணின் மனதில்

திரும்பி வந்துவிடு எனது கணவா.. திரும்பி வந்துவிடு என் கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
ٌ சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்! ٌ என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல....மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
ٌ பள்ளிக்கு செல்லமறுத்து> தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்! ٌ அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது... பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
ٌ கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது குளிரடிப்பதாய் கூறி ஒரு குழந்தையை போல அழுகிறாய் ! மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்.... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய் கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...அழுவதும்... அணைப்பதும்...கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...இடைகிள்ளி... நகை சொல்லி... அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி " ٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு... எனை தீ தள்ளி> வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் கணவா!.....
கணவா.... - எல்லாமே கனவா.......?கணவனோடு இரண்டு மாதம்.... கனவுகளோடு இருபத்தி இரண்டு> மாதமா...? ٌ 12 வருடமொருமுறை> குறிஞ்சிப்பூ ... 5> வருடமொருமுறை> ஒலிம்பிக்....> > 4 வருடமொருமுறை> உலககோப்பை> கிரிக்கெட்... ...> > 2 வருடமொருமுறை கணவன் ...> > நீளும் பட்டியலோடு> நீயும்> இணைந்துகொண்டாய்!ٌ இது> வரமா ..? சாபமா..?> > > அழகுக்காய் பிணத்தின்> சாம்பலில்... முகம்> பூசுவோர் உண்டோ ?> > ٌ கண்களின் அழுகையை....> கண்ணாடி தடுக்குமா> கணவா?> > நான் தாகத்தில்> நிற்கிறேன் - நீ கிணறு> வெட்டுகிறாய்> > நான் மோகத்தில்> நிற்கிறேன் - நீ விசாவை> காட்டுகிறாய்> > > திரும்பி வந்துவிடு> என் துபாய் கணவா...> வாழ்வின் அர்த்தம்> புரிந்து வாழலாம்> > ٌ விட்டுகொடுத்து....> தொட்டு பிடித்து...தேவை> அறிந்து... சேவை> புரிந்து...உனக்காய்> நான் விழித்து...> எனக்காக நீ உழைத்து...> தாமதத்தில் வரும்> தவிப்பு... தூங்குவதாய்> உன் நடிப்பு...> வாரவிடுமுறையில்> பிரியாணி... காசில்லா> நேரத்தில் பட்டினி...ٌ இப்படி காமம்> மட்டுமன்றி எல்லா> உணர்ச்சிகளையும் நாம்> பரிமாறிக்கொள்ளவேண்டும்> ٌ இரண்டு மாதம்மட்டும்> ஆடம்பரம் உறவு உல்லாச> பயணம்..பாசாங்கு> வாழ்க்கை> புளித்துவிட்டது கணவா! ٌ தவணைமுறையில்> வாழ்வதற்கு வாழ்க்கை> என்ன வட்டிக்கடையா?>எப்பொழுதாவது> வருவதற்கு நீ என்ன பாலை> மழையா ? இல்லை ஓட்டு> வாங்கிய> அரசியல்வாதியா ?> > ٌ விரைவுத்தபாலில்> காசோலை வரும் காதல்> வருமா ? பணத்தை தரும்...> பாரத வங்கி ! பாசம்> தருமா? ٌ நீ இழுத்து செல்கின்ற> பெட்டியோடு> ஒட்டியிருக்கிறது என்> இதயம்> அனுமதிக்கப்பட்ட> எடையோடு> அதிகமாகிவிட்டதால்> விமான நிலையத்திலேயே> விட்டுவிட்டாயோ என்> இதயத்தை? பித்தளையை எனக்கு>பரிசளித்துவிட்டு... நீ> தங்கம் தேடி வெளிநாடு சென்றாயே? ٌ பாலையில் நீ......... வறண்டது என் வாழ்வு! வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்! உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..? ٌ விழித்துவிடு கணவா விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு! விசாரித்து விட்டு> போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!> (இல்லையேல் விவாக ரத்து> செய்துவிட்டுப்போ திரும்பி வந்துவிடு என் வெளிநாட்டு கணவா.. வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்