Saturday 18 April 2009

தொழுதிடுவோம் வருங்களேன்!

நிலையில்லாத உலகமதில்
நிரந்த்தரமின்ரி வாழும் நாம்
நித்திய ஜீவன் அல்லாஹ்வை
நித்தம் தொழுதிட வேண்டாமா?
நிம்மதியில்லா உள்ளத்தில்
நிலைதடுமாறும் எண்ணமதை
நேர்மையாளன் அவனிடத்தில்
கூறி முறையிட வேண்டாமா?
அற்பமான இவ்வுலகில் -மிக
சொற்பகாலம் வாழும் நாம் -வெகு
நுட்பமாக நற்செயல் புரிந்து -இறை
நட்பை பெற்றிட வேண்டாமா?
பாவமறியா புருசர்களா -நாம்
தவறே செய்யா மானிடரா
நிறைமனதோடு முறையிடவே -அவனை
நித்தம் தொழுதிடுவோம் வாருங்களேன் .
இறைஇல்லம் பாங்கோசை இரவு பகல் கேட்கிறதே !!
காதில் விழவில்லையா ?
முறையாக சென்றங்கு நிறைவாக தொழுதுவர
நல்லெண்ணம் ஏதும் வரவில்லையா .

No comments: